என்ன சார், ரொம்ப நாளா புதுசா எதுவும் எழுதலே போல இருக்கு, என்ன ஆச்சு என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.
அட நம்ப எழுதலேன்னு, இதே கேள்வியை நிறைய பேரு கேக்குறாங்களே என்கிற ஆச்சர்யம் தான்.
எங்கே சார், ஆபீஸ் வேலை ஏற்கனவே அதிகம், இப்போ ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அதனாலே வேலை இன்னும் அதிகம். கண்டிப்பா எழுதுறேன்.
வீட்டிற்க்கு வந்ததும்...எவன் கண்ணு பட்டுதோ ரெண்டு மாசமா எழுத முடியவில்லை என்று நினைத்தபடி தலைப்பை எழுதினேன் - தேவையற்ற மூடநம்பிக்கைகள்.
3 comments:
//@Ramani has left a new comment on your post "ஏன் சார் எழுதறதே இல்லை - 55 வார்த்தை சிறுகதை":
அருமை அருமை முரண் மிகவும் ரசிக்கும்படியாக இருந்ததுமனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி ஐயா. உங்கள் தொடர்ந்த வருகை மிகவும் ஊக்கம் அளிக்கிறது.
ஏனோ உங்கள் கருத்து பதிவில் தெரியவில்லை ஆனால் மின்னஞ்சலில் உள்ளது.
மிக அருமை. கல்லூரி வாழ்கை முடிந்தவுடன் படிக்கும் பழக்கம் என்னை விட்டு மெதுவாக நீங்கியது. முழு நேரம் கணிணி முன் அமர்ந்து என்னயே நான் மறந்து விட்டேன். வார இறுதி விடுமுறை என்பதால் உங்கள் பதிவுகளை படிக்கச் ஆரம்பித்த என்னக்கு பெரிய உற்சாகம் ஏற்பட்டது. நன்றி என்று குறி உங்களிடம் இருந்து விடை பெற விரும்பவில்லை ரசிகன் அக உங்கள் தொடரில் நானும் இணைகிறேன்.
//@Shundar Seetharaman said...
மிக அருமை. கல்லூரி வாழ்கை முடிந்தவுடன் படிக்கும் பழக்கம் என்னை விட்டு மெதுவாக நீங்கியது. முழு நேரம் கணிணி முன் அமர்ந்து என்னயே நான் மறந்து விட்டேன். வார இறுதி விடுமுறை என்பதால் உங்கள் பதிவுகளை படிக்கச் ஆரம்பித்த என்னக்கு பெரிய உற்சாகம் ஏற்பட்டது. நன்றி என்று குறி உங்களிடம் இருந்து விடை பெற விரும்பவில்லை ரசிகன் அக உங்கள் தொடரில் நானும் இணைகிறேன்.//
சுந்தர், வா தம்பி...நீ சொல்வது சரிதான். வாழ்க்கை என்ற மரத்தில் நாம் மேல் ஏறி செல்லச் செல்ல நம்முடைய வேர் எது என்பதை மறந்து மற்ற விஷயங்களுக்கு நேரத்தை செலவு செய்ய வேண்டியதாகிறது. இதற்கு காரணம் சமூகமா, தனி மனித ஒழுக்கமா என்ற கேள்விக்கு விடை கூறுவது அவ்வளவு எளிதல்ல.
முடிந்த அளவில் தமிழ் படிப்பதையும் எழுதுவதையும் விடாமல் இருக்க முயற்சி செய்.
வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி.
Post a Comment