ஆடுகளம் படத்திலே தனுஷ் சொல்ற வசனம் மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா. என்ன பண்ண, இப்ப இங்கே இருக்குற சூழ்நிலையிலே அதை தான் சொல்ல முடியும் போல இருக்கிறது. அண்ணன் இப்ப குளிக்கிறார், அண்ணன் டிபன் சாப்பிடுறார், அண்ணன் கிளம்பிட்டார் என்று எதோ ஒரு படத்தில் லைவ் கமெண்ட்ரி கொடுப்பது போல அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிற சூறாவளி ஐரீன் பற்றி டிவியில் எந்த சேனல் போட்டாலும் பேசிக் கொண்டிருகிறார்கள். நார்த் கேரலினாவில் இருந்து மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற சொல்லிவிட்டார்கள். அடுத்தது எந்தெந்த பகுதியில் இருந்து மக்களை ஊரைவிட்டு கிளம்ப சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு மக்கள் வெளியே பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருகிறார்கள். என்ன செல்வம் சேர்த்து என்ன, இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை. அதன் சீற்றத்தில் இருந்து விலகி தலை தெறிக்க ஓட மட்டுமே முயற்சிக்கலாம் என்பது தெரிகிறது.
இப்படி நிலை இருக்கும்போது, மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஈமெயில் மற்றும் டிவியிலும் எல்லா பயபுள்ளங்களும் போய் ஒழுங்கா சாப்பாடு, தண்ணி (ஹலோ, வெறும் குடிக்கிற தண்ணி தான், ஓவரா கற்பனை பண்ணாதீங்க) எல்லாம் வாங்கி வெச்சுகோங்க என்று ஓயாம சொல்லிட்டு இருக்காங்க. சரி இவ்வளவு சொல்றாங்க, அதுக்கு மரியாதையை கொடுத்தாவது நம்மளும் போய் எதாவது வாங்கி ஸ்டாக் பண்ணுவோம்னு கடைக்கு போனேன். அங்க போய் பாத்தா, ஆளாளுக்கு ஷாப்பிங் கார்ட்டை புல்லா நிறைச்சிட்டு இருந்தாங்க. என்னடா ஒரு வருஷத்துக்கு தேவையானதை வாங்குறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன். அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. ஏன்னா, அமெரிக்காவில் சாதரணமாக கரண்ட் போகாது, ஆனால் அப்படி போனால், திரும்பி வர சில நேரங்களில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அதனாலே பிரிட்ஜிலே வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களா வாங்கி குவிக்கிறாங்க. எந்த நேரத்திலே ஊரை விட்டு வேறே இடத்துக்கு போக சொல்லுவாங்கனு தெரியாமே, மக்கள் எல்லாம் காருக்கு பெட்ரோல் நிரப்பிகிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் -ல் இருந்து கீழே பூமியை பார்க்கும் அஸ்டிராநட்ஸ் கூட, இங்கே இருந்து பாக்கவே ரொம்ப பயங்கரமா தான் இருக்கு என்கிறார்களாம்.
ஐரீன் அடுத்த இரு நாட்களில் எந்த பக்கம் திரும்புவானு எல்லாரும் உன்னிப்பா பாத்துட்டு இருக்கோம். பாக்கலாம் ஒன்னும் பெரிசா பிரச்சனை இல்லாம ஐரீன் கரை கடந்தால் நன்றாக இருக்கும்.