Thursday, August 13, 2015

ஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)




ஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்புகிறோம் என்ற நினைப்பே கண்களில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி உறங்கிப் போனேன்.

எதோ சத்தம் கேட்டு கண் விழித்த போது விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். சற்றே அதிக புவியீர்ப்பை ஏற்க உடல் சிரமப்பட்டது. கண்களை மூடி சற்று நேர காத்திருப்புக்குப் பின்னர், 'சற்று நேரத்தில், பூமியின் சென்னைப் பகுதியில் இறங்கப் போகிறோம். வெளியே செல்லும் போது ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

2 comments:

Massy spl France. said...

சென்னையில் காற்று மாசடைந்து உள்ளதை புரிந்து கொண்டோம் .

கதையின் ஆரம்பத்தில் " ஐம்பது வருடங்களுக்கு பிறகு ... அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி...". என்றுள்ளது . அப்படி என்றால் , உங்களுக்கு சற்று ஏறத்தாழ 75 என்றும், மகளுக்கு 50 வயது என்றும் வைத்து கொள்ளலாமா?.

மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டேன்.

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நண்பரே.

Narayanan Narasingam said...

நன்றி. இதில் உள்ள 'நான்' நானல்ல. மேலும் சென்னையில் உள்ள காற்றின் மாசைப் பற்றி இந்தக் கதை பேசவில்லை. இன்னும் சற்று கூர்ந்து படித்துப் பாருங்கள், புரியலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...