யூரி காகரின் |
இப்படி விண்வெளி ஆராய்ச்சியில் மனித குலம் பல மகத்தான சாதனைகளை புரிந்துகொண்டிருகிறது. சாதாரண மனிதன் மட்டும் அல்லாமல் பல அறிவில் சிறந்த விஞ்ஞானிகள் கூட விடை கூற முடியாத பல புதிர்களை கொண்டது விண்வெளி. ஆம், மனிதன் விடை காண முடியாத பல விஷயங்களில் விண்வெளி கண்டிப்பாக மிக முக்கியமானது. அதில் முக்கியமானது விரிவடைந்து கொண்டே நம்ம விட்டு விலகி செல்லும் கேலக்சி எனப்படும் பல நட்சத்திர மண்டலங்கள் (இதை பற்றி எப்போதாவது தனியாக ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது). இது போல பல புதிர்கள் கொண்ட விண்வெளியை பற்றி மனிதனின் தேடல் சலிக்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த தேடல் தேவையா இது உண்மையிலே மனித குலத்திற்கு உபயோகமானதா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்பினாலும், மனிதனின் தேடல் தான் நம் சமுதாயம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இந்த தேடல் தொடரட்டும் என்று இதற்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிப்போம்.