Tuesday, April 12, 2011

விண்வெளியில் முதல் மனிதன்


யூரி காகரின்
இன்று ஏப்ரல் 12, 2011. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் என்பவர் விண்கலத்தில் ஏறி அதிவேகத்தில் பயணம் செய்து புவிஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு நம் பூமிப்பந்தை ஒரு முறை வலம் வந்து பத்திரமாக தரை இறங்கினார். அந்த நாள் மனித குலத்தின் சாதனைகளில் ஒரு முக்கியாமான மைல் கல் என்று கூறலாம்.  அதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் குறைவில் அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் விண்வெளியில் பறந்தார். அதன் பின்னர் 1969 -ல் அமெரிக்க விண்வெளி வீரர்  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் என பெயர் பெற்றார்.

இப்படி விண்வெளி ஆராய்ச்சியில் மனித குலம் பல மகத்தான சாதனைகளை புரிந்துகொண்டிருகிறது. சாதாரண மனிதன் மட்டும் அல்லாமல் பல அறிவில் சிறந்த விஞ்ஞானிகள் கூட விடை கூற முடியாத பல புதிர்களை கொண்டது விண்வெளி. ஆம், மனிதன் விடை காண முடியாத பல விஷயங்களில் விண்வெளி கண்டிப்பாக மிக முக்கியமானது. அதில் முக்கியமானது விரிவடைந்து கொண்டே நம்ம விட்டு விலகி செல்லும் கேலக்சி எனப்படும் பல நட்சத்திர மண்டலங்கள் (இதை பற்றி எப்போதாவது தனியாக ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது).  இது போல பல புதிர்கள் கொண்ட விண்வெளியை பற்றி மனிதனின் தேடல் சலிக்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த தேடல் தேவையா இது உண்மையிலே மனித குலத்திற்கு உபயோகமானதா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்பினாலும், மனிதனின் தேடல் தான் நம் சமுதாயம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இந்த தேடல் தொடரட்டும் என்று இதற்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிப்போம்.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

படமும் பதிவும் அருமை
கேலக்ஸி குறித்து எழுதும் எண்ணம்
இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டு இருப்பது
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

எனது ஓட்டை பதிவு செய்து உள்ளேன்
எப்போதும் உங்கள் ஓட்டை முதல்
ஓட்டாக பதிவு செய்தால்
தொடர்பவர்களுக்கு வசதியாக இருக்கும்
தொடர்ந்து சந்திப்போம்

Narayanan Narasingam said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...