குமார் போன வாரம் நடத்தின திருக்குறளை சொல்லு பார்க்கலாம்.
இல்லே சார், தெரியாது. நான் போனவாரம் வரலே.
நீதான் யாரையாவது என்ன நடத்தினாங்கன்னு கேட்டு படிச்சிருக்கணும். மத்த பாடம் மாதிரி தமிழையும் நல்லாப் படிக்கலாம் இல்லே என்று கோபமாகக் கூறியபடி மேஜையின் மேல் ஒலித்த செல்போனை எடுத்தார்.
ஹலோ, சொல்லுங்க சார். மத்த டீச்சர்ஸ் எல்லாரும் கொடுத்துட்டாங்களா. ஊருக்கு போயிட்டு சண்டே தான் வந்தேன், எனக்கு தெரியவே தெரியாது. கண்டிப்பா நாளைக்கு மார்னிங் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.
5 comments:
55வார்த்தைகளா? இது ஏதும்போட்டிக்கா சகோதரரே? சின்னதானாலும் சிறப்புதான்///எக்சலண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லவில்லை:):)
வணக்கம் சகோதரி ஷைலஜா,
இது போட்டிக்காக எழுதிய கதை அல்ல. சுஜாதா அவர்களின் எழுத்து மூலமாக எனக்கு அறிமுகமாகிய
55 வார்த்தை சிறுகதைகள் மீது கொண்ட ஈர்ப்பால் அவ்வபோது என் மனதில் தோன்றும் கருவை, கருத்தை 55 வார்த்தைகளுக்குள் வடிக்க முயற்சி செய்வேன்.
ஆங்கிலத்தில் இவ்வகை கதைகளை நானோ பிக்க்ஷன், சடன் பிக்க்ஷன் என்றும் அழைப்பார்கள். பொதுவாக கதையில் எல்லா விஷயங்களையும் விளக்காமல் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவது இந்த வகை கதைகளில் உள்ள சிறப்பு.
இந்தக் கதையிலும் மூன்று விஷயங்களை கருவாகக் கொண்டு எழுதி இருக்கிறேன். முதல் இரண்டு விஷயங்கள் தெரிந்தே எழுதினேன். மூன்றாவது விஷயம் ஒரு வாசகனாக நானே திரும்பப் படிக்கும் போது உணர்ந்தேன்.
ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது.மற்ற இரண்டையும் யாரவது கண்டுபிடித்து சொல்கிறார்களா என்று பார்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
i think the other two must be
1.The teacher says Tamil subject...This means he is teaching Tamil as Subject but not as Classical Language..
2.While Students are not allowed to use Mobile Phone in the Class the teacher must also follow it but in your Micro Story he is not doing so....
Are my Predictions Right...
//@Visu said...
i think the other two must be
1.The teacher says Tamil subject...This means he is teaching Tamil as Subject but not as Classical Language..
2.While Students are not allowed to use Mobile Phone in the Class the teacher must also follow it but in your Micro Story he is not doing so....
Are my Predictions Right...//
வருகைக்கு நன்றி விசு.
இவை இரண்டுமே புதிய கோணம். இதை நினைத்து நான் எழுதவில்லை. ஆனால், வாசகர்களை புதிய கோணத்தில் இருந்து பார்க்கவைக்கும் இந்த விஷயம் தான், நானோ பிக்க்ஷன் வகை கதைகளின் வெற்றி.
good
Post a Comment