என்னங்க இந்த இடமாவது நமக்கு அமையணுமேன்னு பதைபதைப்பா இருக்கு.
நம்ம கையிலே என்ன இருக்கு ரஞ்சிதம். நமக்குன்னு எங்கே அமையணும்னு இருக்கோ அங்கே தான் அமையும். இதோ போன் கூட அடிக்குது பாரு...அவங்கதான் கூப்புடுறாங்க.
ஹலோ, சொல்லுங்க சார். அ... அப்பிடியா.... சரி, சரி...வெச்சுடுறேன்.
இந்த இடமும் அமையலே ரஞ்சிதம். அவங்களுக்கு வரதட்சணையா நகையோ பணமோ கொடுக்கக்கூடாதுன்னு நம்ம பையன் போடுற கண்டிசன் பிடிக்கலையாம். பையனுக்கு எதாவது குறை இருக்குமோனு அவங்க உறவுகாரங்க சொல்றாங்களாம்.
--------------------------------------
--------------------------------------
பின் குறிப்பு:
சரி, கதையை ஒரு வழியாக ஐம்பத்தைந்து வார்த்தைகளில் முடித்துவிட்டேன். இனி என் கருத்து. இந்த கதையின் கருவில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. முற்போக்குவாதி போல பேசும் பல இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், வரதட்சணை வாங்காவிட்டால் தங்கள் மகனிடம் ஏதோ குறை உள்ளது என்று பெண்வீட்டார் பேசுவார்கள் எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் சாமர்த்தியமாக, உங்க பொண்ணு... உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி என்ன செய்யணுமோ செய்யுங்க என்று பெண்வீட்டாரின் சுயமரியாதைக்கு சவால் விடுவர்.
வரதட்சணை வாங்காமல் ஒருவனால் திருமணம் செய்ய முடியாதா. எங்களுக்கு வரதட்சணை வாங்க விருப்பம் இல்லைதான், ஆனா வாங்கலேன்னா எங்களையே இந்த சமூகம் சந்தேகபடுகிறது என்று பிள்ளை வீட்டார் கூறுவது உண்மையா இல்லை வெறும் சப்பைகட்டா. நீங்களே சொல்லுங்கள்.
7 comments:
Naanum varathatchinainnu ethuvum vangallai. But neenga sollra madiri oru prachanaiyum varrla. Aana... thani madipu mariyadai ellam kalyanam aana puthusula thaan. Eppo nagai pottathu, travel charge kuduthathunnu... Ennamo soththai eluthi vaangina madiri korai solluvaanga.. Appa namakku thonum... Pesama nalla karanthirukkalamonnu.."
//@Anonymous said...//
வாங்க சார். நீங்க சொல்றது சரிதான். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல, காலம் செல்ல செல்ல நீங்கள் செய்த நல்லவற்றை மறந்து மற்ற விஷயங்களைப் பற்றி குறை கூறும்போது கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்யும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் 55 வார்த்தைக் கதை அருமை
எடுத்துக்கொண்ட கதையின் கருவும் அருமை
இப்போது வரதட்சணை வேண்டாம் எனச் சொல்வது
ஒரு நாகரீகம் போல பரவி வருவது நிஜம்தான்
ஆனால் அதையே திருமணத்தை மட்டும்
விமரிசையாக செய்துவிடுங்கள்
உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்கிறீர்கள்
குறைத்தா செய்துவிடுவீர்கள்
வருகிறவர்களை மட்டும் நன்றாக கவனித்து விடுங்கள்
என்பன போன்ற புதிய முஸ்தீபுகளில்
பெண் வீட்டாரை என்ன பாடுபடுத்த வேண்டுமோ
அப்படி படுத்தி எடுத்துவிடுகிறார்கள்
அதற்குப் பதிலாக வரதட்சனையே வாங்கிக்கொள்வது
நல்லதுபோல் படுகிறது.வாழ்த்துக்கள்
(நானும் 55 வார்த்தைகளில் பின்னூட்டம் இட
முயற்சித்திருக்கிறேன்)
த.ம 1
வாங்க ரமணி ஐயா,
உண்மைதான், வரதட்சணை நாங்க வாங்கலே என்று ஊரெல்லாம் பெருமையாக கூறிக்கொண்டு, இப்படி மறைமுகமாக பாடுபடுத்துதல் கொடுமைதான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
//@திண்டுக்கல் தனபாலன் said...வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Post a Comment