அமர்க்களம் படத்தில் வரும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலை போல, இதை எல்லாம் நம் தமிழ்நாட்டில் மக்களிடம் கேட்கலாம் என்று நான் நினைத்ததை இங்கு பட்டியலிடுகிறேன். இது எதோ வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து, இங்குள்ள குறைகளை கேலி செய்யும் எண்ணத்தில் கூறவில்லை. நம் மக்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டால் மேலும் நன்றாக இருக்குமே என்று என் மனதிற்குள் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு தான்.
- எந்த ஒரு இடத்திலும் வரிசையில் நின்றால்...
- அனைவரும் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைபிடித்தால்...
- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமாவது வழி விட்டு முன்னே செல்ல அனுமதித்தால்...
- செல்போனில் சத்தமாக நம் காதுக்கு அருகே வந்து பேசாமல் இருந்தால்...
- குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போட்டால்...
- பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்றவைகளை செய்யாமல் இருந்தால்...
- வாடிக்கையாளர்கள் சேவையை குறித்த நேரத்தில் சரியாக செய்து கொடுத்தால்...
- தமிழ் தெரிந்தும் தேவையே இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதை குறைத்தால்...
- முடிந்தவரை சட்டத்தை மதித்தும், பணம் மற்றும் அதிகார பலத்தால் அதை வளைக்காமல் இருந்தால்...
- நம்மை விட பண வசதியில் குறைந்தவர்களையும் சக மனிதர்களாக மதித்தால்...
இந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment