இது கொஞ்சம் புலம்பல் டைப் பதிவு. நான் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழம்பி போய் தான் இதை எழுதுகிறேன். சரி விஷத்திற்கு வருகிறேன். மற்ற எந்த விஷயத்தையும் விட யாராவது வரிசையில் நிற்காமல் முன்னே நுழைய முயற்சித்தால் எனக்கு கொஞ்சம் கோபம் வருகிறது. கொஞ்சம் கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக, சம்பத்தப்பட்ட நபரை அழைத்து வரிசையில் வருமாறு கூறினால், ஒரு சிலர் என்னை ஒரு கிண்டலான பார்வை பார்த்து விட்டு முன்னே சென்று நின்று கொள்வார்கள். இது கூட பரவாயில்லை, ஒரு சிலர் நான் ஒழுங்கா தான் லைன்லே வரேன், நீதான் முன்னாடி வந்து நிற்கிறே என்று விவாதம் செய்வார்கள். இது எதோ சினிமா தியேட்டரில் அல்லது ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் போன்ற இடத்தில் மட்டும் அல்லாமல், விமான நிலையத்தில் - மெத்த படித்த மேதாவிகள் போல் தோற்றம் அளிக்கும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களிடம் கூட நடக்கிறது. வரிசையில் நிற்காமல் முன்னே செல்பவர்களை அந்த சேவையை அளிக்கும் சிப்பந்திகளும் ஒன்றும் சொல்வதில்லை. வரிசையில் நிற்காமல் பல திசைகளில் இருந்து ஊர்ந்து வந்து அனைவரும் உள்ளே நிழைய முயற்சிப்பதை பார்க்கும் போது மகா எரிச்சலாக உள்ளது.
இது வரிசையில் நிற்காமல் செல்லும் வழக்கம் தான் பல இடங்களில் சட்டத்தை மீற காரணமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. போக்குவரத்தில் முந்துவது, முண்டியடித்து கொண்டு நடப்பது என கூறிக்கொண்டே போகலாம். முடிந்தவரை அவர்களிடம் பேசி அவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்ட முயற்சி செய்தாலும், ஒரு சில நேரத்தில் அட போங்கடா எப்படியோ என்று அடக்கி வாசிக்க தோன்றுகிறது. நான் எல்லா விஷயத்திலும் பெர்பெக்ட் கிடையாது தான், ஆனாலும் நாம் சரின்னு நினைப்பதை எடுத்து சொல்லி, அது ஒருவரையாவது மாற்றாதா என்கிற நப்பாசையில் என் முயற்சியை விக்ரமாதித்தன் போல தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை ஊரோடு ஒத்து வாழ் என்பதை பின்பற்றாமல், நான் தான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்றனோ...நீங்களே சொல்லுங்க...
6 comments:
இதெல்லாம் நம் கலாச்சாரம் பாஸ்...
அதை மாற்றக்கூடாது....
என்னதான் புலம்பினாலும் அவசர உலகத்தில் இப்படித்தான் இருக்கு...
என்ன செய்வது....
ஆமா சௌந்தர் என்ன பண்ண...இதுலே இன்னொரு கூத்து என்னன்னு கேட்டீங்கனா...இதே ஆள் வெளிநாட்டுக்கு போனா, அப்பிடியே உல்டாவா மாறி வரிசைலே நிப்பாரு...சொந்த மண்ணில தான் இந்த அலப்பறை எல்லாம்...
வருகைக்கு நன்றி சௌந்தர்.
உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும்தான்
பல இடங்களில் தகறாரும் செய்திருக்கிறேன்
பின்னால் யோசித்துப் பார்க்கையில்
நாம்தான் நம் குணத்தைக்
கெடுத்துக்கொள்கிறோமோ எனத் தோன்றும்
ஆகையால் இப்போதெல்லாம் எந்த எந்த
நாளில் கூட்டம் இருக்காது என்ற
கணக்கெடுத்து வைத்துக்கொண்டு
அந்த நாளில் வேலையை வைத்துகொள்கிறேன்
குறிப்பாக செவ்வாய் ராகு காலம் மாதக் கடைசி இப்படி
அனைவரின் ஆதங்கத்தையும் மிக அழகாக
விளக்கிப்போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாங்க ரமணி ஐயா. நீங்க சொல்வது சரிதான். ஒவ்வொருவரும் அவர்கள் செய்வது சரிதான் என்று நினைகிறார்கள். சிறிது பொறுமையாக அடுத்தவர் நிலையில் இருந்து நினைத்து பார்த்தால், புரிந்து கொண்டு மாறுவார்கள்.
நாராயணன், உங்க கொள்கையை யாருக்காகவும் விடாதீங்க. நானும் வரிசையில் நின்று வருபவன். உங்களின் அனுபவம் எனக்கும் உண்டு. இன்று நாம் மைனாரிட்டியாக இருந்தாலும் அடி மேல் அடி வைத்துதான் அம்மியை நகர்த்த முடியும். மனதைத் தளரவிடாதீங்க.
//நாராயணன், உங்க கொள்கையை யாருக்காகவும் விடாதீங்க. நானும் வரிசையில் நின்று வருபவன். உங்களின் அனுபவம் எனக்கும் உண்டு. இன்று நாம் மைனாரிட்டியாக இருந்தாலும் அடி மேல் அடி வைத்துதான் அம்மியை நகர்த்த முடியும். மனதைத் தளரவிடாதீங்க.//
நன்றி இந்தியன். கண்டிப்பாக உறுதியோடு இருக்கிறேன். நாம் உறுதியோடு இருந்தால் இந்த சமூக மற்றதை ஒரு நாள் கொண்டுவந்து விடலாம்.
Post a Comment