Saturday, August 20, 2011

வட்டம் - 55 வார்த்தை சிறுகதை



என்ன சாரதா, நாப்பது பவுனுக்கு என்ன பண்றது. இன்னும் கல்யாணச் செலவு வேற இருக்கு என்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஆமாங்க, நம்ம பொண்ணை வியாபாரப் பொருளாப் பாக்குறாங்க. இந்த வரதட்சணை கொடுமை என்னைக்குத்தான் ஒழியுமோ ?

பேசாமே நம்ம தாம்பரம் நிலத்தை வித்துடலாம். குமார் படிப்புக்கும் உதவும்.

நிலம் விற்ற பணத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. 

சில வருடங்களுக்குப்பின், கல்யாணத் தரகரிடம் - எங்களுக்கு ஒரே பையன், இன்ஜினியரிங் முடிச்சிட்டு கை நிறைய சம்பாரிக்கிறான், நூறு பவுனுக்கு குறையக்கூடாது என்றாள் சாரதா.

6 comments:

divya said...

hai writer superb un story kal ennai mathiri ulla house wife kum vattathil irukum engalukum pakkotta eat panny kidda kudumpa kuppaikalai maranthu saitha pattai ninaivukaloda paris il ellatha kuttan sorrai suvaika eathuvaga kannuku eatha maga kovai matrum paris photo entru chennai silks anupavathudan udavum karankalalai un kathaikal uravin velipadai unnartha erai thedum paravai ena enkal manathai thotu sellum kathaikalai unnaku antha god alli thara pray pannum un kathaein rasikai...

Narayanan Narasingam said...

//@divya//

வாங்க, என்னுடைய பல பதிவகளை படித்துவிட்டு ஒரே மூச்சில் உங்கள் கருத்துக்களை இங்கு கூறியிருப்பதை கண்டு மகிழ்ச்சி.வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

பத்மநாபன் said...

55 வார்த்தை கதை நன்றாக பிடிபட்டு விட்டது.. கரு ஒன்று எடுத்து வார்த்தைகளை எண்ணி வடிப்பது ஒரு கலை.. வாழ்த்துகள்..

Narayanan Narasingam said...

//@பத்மநாபன்//

வாங்க பத்மநாபன். வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிக்க நிறையவே மெனகெட வேண்டி இருக்கிறது. ஆனாலும் எழுதி முடித்துவிட்டு பார்க்கும் போது ஒரு நிறைவு கிடைகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

bandhu said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

Narayanan Narasingam said...

//bandhu said...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி bhandu...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...