கூட்டாஞ்சோறு - நெல்லை மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பிரசித்தி பெற்ற உணவு வகை. அரிசி, பருப்பு, பலவித காய்கறிகள், தேங்காய், சிவப்பு மிளகாய் என பலவித ஐட்டங்களை சேர்த்து காரசாரமாக செய்யப்படும் ஒரு உணவு. இப்போது கூட்டாஞ்சோறு என்ற பெயரில் சென்னையில் கூட ஒரு உணவகம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
கூட்டாஞ்சோறு போல கதம்பமாக பல விஷயங்களை பதிவில் எழுதவேண்டும் என்று நினைத்துகொண்டு சில மாதத்திற்கு முன் ஒரு புதிய பதிவு வகையை சேர்த்தேன். ஆனால் அப்படி நினைத்தபடி அடிக்கடி இந்த வகையில் எழுத முடியவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்து துவங்கி இருக்கிறேன். இனி கூட்டாஞ்சோறு உங்களுக்காக...உப்பு, புளிப்பு, காரம் எதுவும் சரியாக இல்லை என்றால் சொல்லுங்கள், இந்த முறையோ அல்லது அடுத்த முறையோ சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நாட்டு நடப்பு:
லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அன்னா ஹசாரே இருந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், அதிகாரிகளும், மக்களும் இன்னும் சாமர்த்தியமாக மாட்டிகொள்ளாமல் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ முயற்சித்தால் என்ன செய்ய முடியும். லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்காது என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், லஞ்சம் மற்றும் ஊழலில் மக்கள் பங்கும் பெருமளவில் இருக்கிறது என்பதே என் கருத்து. தன் காரியம் விரைவில் அதிகம் செலவு இல்லாமல் முடியவேண்டும் என்பதால் மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர். முறையான ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் எத்தனைப் பேர் வாகனம் ஓட்டுகிறார்கள். டிராபிக் போலீசிடம் மாட்டிகொண்டால் சுலபமாக தப்பித்துகொள்ள இருக்கவே இருக்கிறது லஞ்சம். இன்று கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்து வைக்க இருக்கும் ஒரு இளைஞன் கூட போலீஸ்காரங்களை எல்லாம் மதிக்கக்கூடாது என்கிறான். இது ஒரு சிறு உதாரணம் தான், இதைப்போல நிலம் வாங்க/விற்க, கல்லூரியில் சேர்க்க, வருமான வரி என பல இடங்களில் கண்ணுக்கே தெரிந்தே லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லா ம் காரணம் யார் தேர்வு என்ன என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. நல்ல தலைவன் மற்றும் மக்களுக்கு கல்வியும் உலக அறிவும் கிடைத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.
அறிவியல் பிட்ஸ்:
செவ்வாய் கிரகம் கைகெட்டும் தூரம் தான்
மணிக்கு 123,000 மைல் வேகத்தில் செல்லகூடிய பிளாஸ்மா என்ஜின் மூலமாக மார்ஸ் கிரகத்திற்கு 39 நாட்களில் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்கள். பிளாஸ்மா எஞ்சினில் உள்ள நியுக்ளியர் ரியாக்டர்கள் பிளாஸ்மாவை இரண்டு மில்லியன் டிகிரி வரை சூடாக்கும் திறன் கொண்டவை. இவ்வகை என்ஜின் குறித்து ஆராய்சிகள் நடந்துகொண்டிருகிறது. பிளாஸ்மா என்ஜின் மெதுவாக தொடங்கி பின்னர் அதிவேகத்தில் செல்ல ஆற்றல் கொடுக்கும். அதனால் இதை தொலைதூரப் பயணத்திற்கு மட்டுமே உபயோகிக்கும் சாத்தியம் உள்ளது. இது போன்ற சிக்கல்களை சரி செய்தால், சந்திரனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம், உலகையே ஒரு மணிநேரத்தில் நான்கு முறைக்கு மேல் சுற்றிவந்து விடலாம்.
சினி பட்டறை:
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள, மங்காத்தா திரைப்படம் USA -வில் 70 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படம் உலகெங்கிலும் (கேரளா தவிர) ஆகஸ்ட் 31 அன்று ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் லுக் அண்ட் ஸ்டைல் மிக வித்தியாசமாக உள்ளது. மங்காத்தா அஜித்தின் ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிரைலரே அசத்துகிறது, கிழே உள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள்.
கருத்து கந்தசாமி:
புது மாப்பிள்ளைக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில்...
திருமண வாழ்கையில் நீ கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்,
ரசித்த வீடியோ:
புது மாப்பிள்ளைக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில்...
திருமண வாழ்கையில் நீ கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்,
- உன் மீது தவறு இருந்தால் ஒப்புக்கொள்.
- உன் மீது தவறு இல்லாவிட்டால் வாயை மூடிகொண்டு அமைதியாய் இரு.
ரசித்த வீடியோ:
நன்றி.
3 comments:
பயனுள்ள சத்தான கூட்டாஞ்சோறு
தொடர வாழ்த்துக்கள்
//Ramani said...பயனுள்ள சத்தான கூட்டாஞ்சோறுதொடர வாழ்த்துக்கள்//
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி ஐயா.
தமிழ்மணம் 1
Post a Comment