Saturday, August 13, 2011

குப்பை - 55 வார்த்தை சிறுகதை

சுஜாதா அவர்களின் 55 வார்த்தை கதைகளின் மேல் கொண்ட ஈர்ப்பால் நான் முயற்சி செய்துள்ள சின்னஞ்சிறுகதை. இந்த கதையில் மொத்தம் 55 வார்த்தைகள் மட்டுமே. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

குப்பை



தீபாவளி சமயம் அலுவலக விடுமுறைக்கு பெரியம்மா  வீட்டுக்கு வந்திருந்த அரவிந்தன் காலை உணவு திருப்தியாக சாப்பிட்ட பின் கை கழுவ வாஷ்பேசின் அருகே வந்தான். 

சட்டென்று முகம் மாறி அருகில் இருந்த டம்ப்ளரில் தண்ணீர் பிடித்து ஹாலில் நடுவே கை கழுவினான்.

அரவிந்தா என்ன பண்றே என்று பதறிய பெரியம்மாவைப் பார்த்து சிரித்தபடி, நீங்க மட்டும் குப்பையை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடாம மாடிலே இருந்து கிழே வீசலாம், நான் நடு வீட்டில் கை கழுவக்கூடாதா என்றான்.

6 comments:

பத்மநாபன் said...

அருமை நண்பா.. வாத்தியார் இருந்தால் ''கற்றதும் பெற்றதும் '' எடுத்து போட்டு பாராட்டியிருப்பார்

துளசி கோபால் said...

அருமை!

ஆமாம்....வாஷ்பேஸின்லே இருந்து பார்த்தால் தெருக்குப்பை தெரியுமா?

Narayanan Narasingam said...

//அருமை நண்பா.. வாத்தியார் இருந்தால் ''கற்றதும் பெற்றதும் '' எடுத்து போட்டு பாராட்டியிருப்பார்//

வாங்க பத்மநாபன். அப்படி நிகழ்ந்திருந்தால் அது எனக்கு கிடைத்த மிகபெரும் பாக்கியம்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Narayanan Narasingam said...

//அருமை!

ஆமாம்....வாஷ்பேஸின்லே இருந்து பார்த்தால் தெருக்குப்பை தெரியுமா? //

வாங்க துளசி மேடம்,

அதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிட்டேன். அரவிந்தன் கை கழுவும் போது எப்படியோ பெரியம்மா மாடியில் இருந்து குப்பையை வீசுவதை பார்த்திருக்கிறான். அதற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நடு ஹாலில் கை கழுவிகிறான்.

இதுவும் சுஜாதாவிடம் இருந்து கற்றது தான். எல்லாவற்றையும் விளக்கிகொண்டிருக்காதே, வாசகர்கள்/வாசகிகள் புத்திசாலிகள், அவர்களே புரிந்து கொள்வார்கள் என்பார் அவர்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Yaathoramani.blogspot.com said...

நல்ல முயற்சி நல்ல பதிவு
55 வார்த்தைகளில் எழுதியது என்பதை
அடிக்குறிப்பாக கொடுத்திருந்தால்
கதையின் கரு இன்னமும் நன்றாகக்
கவனிக்கப் பட்டிருக்குமோ?
நல்ல பதிவு வித்தியாசமான முயற்சி
தொடர வாழ்த்துக்கள்

Narayanan Narasingam said...

//நல்ல முயற்சி நல்ல பதிவு
55 வார்த்தைகளில் எழுதியது என்பதை
அடிக்குறிப்பாக கொடுத்திருந்தால்
கதையின் கரு இன்னமும் நன்றாகக்
கவனிக்கப் பட்டிருக்குமோ?
நல்ல பதிவு வித்தியாசமான முயற்சி
தொடர வாழ்த்துக்கள் //

சரியாக கூறினீர்கள் ரமணி ஐயா. அடிக்குறிப்பில் 55 வார்த்தை சிறுகதை என்று மாற்றிவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...