அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.
ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.
இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...
சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.
பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன்.
13 comments:
செய்யங்கய்யா செய்யுங்க...
இது நம்ம ராஜ்யம்தானே...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
செய்யங்கய்யா செய்யுங்க...
இது நம்ம ராஜ்யம்தானே...//
வாங்க சௌந்தர், என்ன பண்றது...நம்ம ப்ளாக் எழுதுறதை தடை செய்ய பல சக்திகள் இருப்பதால், இப்படி எல்லாம் பொறுப்பா இருந்தா தான் ப்ளாக் எழுத முடியும்.
நல்ல முயற்சி என்ன எழுதுவது என
யோசிக்கிறவர் யோசிக்கவேண்டியது தானே
அடுத்தவர்கள் பதிவை ஏன்
படிக்கத் துவங்குகிறார்
பதிவை அவர்கள் பதிவிலிருந்து பண்ணப்(!)
பார்க்கிராறா
நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்
//Ramani said...
அடுத்தவர்கள் பதிவை ஏன்
படிக்கத் துவங்குகிறார்
பதிவை அவர்கள் பதிவிலிருந்து பண்ணப்(!)
பார்க்கிராறா//
வாங்க ரமணி சார். இப்படி ஒரு கோணத்தில் இருந்து நான் யோசிக்கவே இல்லை. ஆனால் இதுதான் சடன் பிக்க்ஷன் கதைகளின் வெற்றி.
எப்போதும் லேப்டாப்பும் கையுமா படிச்சிட்டு இல்லை எழுதிட்டு இருக்குறது தவிர உங்களுக்கு வேறே வேலையே இல்லையா என்ற கேள்வியை பல பதிவர்கள் கேட்டிருப்பார்கள். இந்தப் பதிவர் தன் மகனை படிக்க சொல்லிவிட்டு, தான் மற்ற எந்த வேலையும் செய்யாமல் பதிவுகளில் உட்கார்ந்து விடுகிறார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் உங்கள் மகனை கண்டித்ததை போல உங்கள் தாயாரும் உங்கள் அருகில் இருந்திருந்தால்.....
ஏம்ப்பா...இப்பத்தான் அலுவலகத்திலிருந்து வந்திருக்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா?
என்று செல்ல கண்டிப்புடன் உங்களை அதட்டுவார் என்பதே உண்மை.
வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.
//@அந்நியன் 2 said...
ஏம்ப்பா...இப்பத்தான் அலுவலகத்திலிருந்து வந்திருக்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா?
என்று செல்ல கண்டிப்புடன் உங்களை அதட்டுவார் என்பதே உண்மை.//
இதை..இதை..இதத்தான் நான் எதிர்பாத்தேன், சரியா பிடிச்சிடீங்க அந்நியன்.
வருகைக்கும், கருத்துக்கும் அதற்கும் மேலாக தமிழ்மணம் ஓட்டுக்கும் மிகவும் நன்றி.
ஓ ஓ, நாம எல்லாரும் பதிவர்கள் இல்லியா அப்படித்தான் இருப்போம் போல.
//@Lakshmi said...
ஓ ஓ, நாம எல்லாரும் பதிவர்கள் இல்லியா அப்படித்தான் இருப்போம் போல.//
வாங்க லக்ஷ்மி மேடம். அங்கேயும் இதே கதை தானா...பல பதிவர்கள் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லா இருக்குங்க அப்படியே நம்ம தளத்துக்கும் வருகை தாருங்கள்http://kovaisakthi.blogspot.com/2011/08/blog-post_31.htmlநட்புடன் ,கோவை சக்தி
நல்லா இருக்குங்க அப்படியே நம்ம தளத்துக்கும் வருகை தாருங்கள்http://kovaisakthi.blogspot.com/2011/08/blog-post_31.html
நட்புடன் ,
கோவை சக்தி
//@sakthi said...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி. உங்கள் தளத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறன். மீண்டும் வருகிறேன்.
என்ன செய்றயது பதிவர ஆனலும், பதிவு போட ஆரம்பித்ததில் இருந்து ஆபிஸில் இன்று என்ன முடிக்கனும் என்பதை விட பதிவு அடுத்த என்னன்னு தோனுதோ
//Jaleela Kamal said...
என்ன செய்றயது பதிவர ஆனலும், பதிவு போட ஆரம்பித்ததில் இருந்து ஆபிஸில் இன்று என்ன முடிக்கனும் என்பதை விட பதிவு அடுத்த என்னன்னு தோனுதோ//
வாங்க ஜலீலா, இன்னும் அவ்வளவு தூரத்துக்கு போகலே, ஆபீஸ்லே இருந்து வந்ததும் என்ன பதிவு போடணும்னு தோணுது.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Post a Comment