Wednesday, September 7, 2011

மனசு - 55 வார்த்தை சிறுகதை



ஏண்டா இப்படி சின்னக் குழந்தைங்க மாதிரி அடிசுக்குறீங்க...நீங்களே பாருங்க வசந்தி அக்கா - பன்னெண்டு வயசுக்கு மேலே ஆச்சு, ரெண்டும் இப்படி அடிச்சிகிட்டு இருக்குதுங்க.

நீ ஒன்னும் கவலைப்படாதே, அதெல்லாம் போகப்போக சரி ஆயிடும்... சரி நீ சொல்லு, உன்னைப் பத்தி இப்படிப் பேசி இருக்கா அவ, சும்மாவா விட்டே நீ .

அதெப்படி விட முடியும், அவ வீட்டுக்கே போய் நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தைக் கேட்டுட்டு வந்துட்டேன், ஆனா நான் சொல்லவே இல்லைன்னு சாதிக்கிறா அவ.


4 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான முயற்சி
ஐம்பத்து ஐந்துக்குள் ஒரு விஷயத்தை
கொண்டு வருதல் மிக கடினமான பணியே
அதை மிக அழகாகச் செய்து போகிறீர்கள்
எண்ணிப் பார்த்தேன்
பதினெட்டு பதினெட்டாக ஒரு பாராவை
பிரித்துக்கொண்டு மிக நேர்த்தியாகச் செய்துள்ளது அழகு
இதில் 18+19+17
மனம் கவர்ந்த பதிவு
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்துக்கள் த.ம 1

Narayanan Narasingam said...

வாங்க ரமணி ஐயா. தவறாமல் ஒவ்வொரு பதிவையும் படித்து கருத்து சொல்லவதற்கு மிகவும் நன்றி.

கடைசி பாராவில் 18 வார்த்தைகள் உள்ளன. 'விட முடியும்' என்பதை நான் இரு வார்த்தைகளாக போட்டிருக்கிறேன். நீங்கள் அதை ஒரு வார்த்தையாக கணக்கிட்டீர்களா என்று தெரியவில்லை. 'விட முடியும்' என்பது ஒரு வார்த்தையாகத் தான் இருக்கவேண்டுமா என்று தெரியவில்லை.

வருகைக்கும், கருத்துக்கும் மீண்டும் நன்றி.

மகேந்திரன் said...

தாயைப்போல பிள்ளை
நூலைப்போல சீலை

55 வார்த்தைக்குள் அழகிய சிறுகதை.

Narayanan Narasingam said...

//@மகேந்திரன் said...//

சரியா சொன்னீங்க மகேந்திரன், நல்லதோ கெட்டதோ பெற்றவர்களிடம் இருந்து மிக விரைவில் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...