Sunday, September 25, 2011

கூட்டாஞ்சோறு - Sep 25, 2011

நாட்டு நடப்பு:

தனியொருவனுக்கு உணவில்லை எனில் என்று தன் கோபத்தை காட்டிய பாரதி, இன்றைய நிலையை பார்த்தால் என்ன கூறுவார் என்று தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தி இரண்டு கோடியாக இருந்தது. தற்போது இது நாற்பது கோடியாக உயர்ந்திருக்கிறது. அதுவும் இதை எப்படி கணக்கு எடுக்கிறார்கள் தெரியுமா, நகர் புறங்களில் 965 ருபாய் மாத வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் 781 ருபாய் மாத வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளை கருதப்படுவதில்லை. இப்படி இருக்கையில் உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிகையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை வருடத்தில் அனைவருக்கும் தரமான கல்வி அளித்திருந்தால் இந்த நிலை கண்டிப்பாக ஓரளவிற்காவது மாறி இருக்கும் என்று தோன்றுகிறது. ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளிக்கு அருகே அந்தப் ஊராட்சியின் கழிவுகள் மட்டும் இல்லாமல் பல வணிக நிறுவனகளின் உணவுக்கழிவுகளும் கொட்டப்படுகின்றனவாம். சுமார் 1800 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இந்த பள்ளியை அவ்வப்போது துர்நாற்றம் தாங்க முடியாமல் விடுமுறை விட்டு விடுவார்களம். நல்லா சூழ்நிலையில் படிக்கும் போதே மாணவர்களின் கவனம் சிதறும், இப்படி ஒரு நிலையில் எப்படி படிக்க முடியும். அங்குள்ள ஆசிரியர்கள் தான் எப்படி பாடம் நடத்த முடியும்.

கடந்த சில நாட்களில் அமெரிக்க டாலரின் மதிப்பு விறுவிறுவென்று ஏறிவிட்டது. இப்போது ஒரு டாலரின் மதிப்பு சுமார் 50 ருபாய். அமெரிக்காவில் வசிக்கும் சில இந்தியர்கள் இந்த செய்தியை பெரும் மகிழ்ச்சியோடு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் இது இந்தியவிற்கு உண்மையிலேயே நன்மையாகத் தேரியவில்லை (ஒரு சில வர்த்தகங்களைத் தவிர). இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் 680 மேல் குறைந்துவிட்டது. பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணையாக கொடுக்க நகை வாங்கிய பெற்றோர்கள் இதனால் - ச்சே கொஞ்சம் பொருத்து வாங்கி இருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அறிவியல் பிட்ஸ்:

சர்வதேச விண்வெளி மையம்:


மனிதன் தயாரித்து விண்வெளியில் உள்ள மிகப் பெரிய பொருள் சர்வதேச விண்வெளி மையம் தான். பூமியிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மையம் பூமியைச் சுற்றி மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ஒரு நாளில் 16 முறை பூமியைச் சுற்றி வரும் இந்த மையம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா என மேலும் பல நாடுகளின் கூட்டு தயாரிப்பின் உருவானது. இதில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அவர்களுக்கு தேவையான சாதனங்கள் பூமியில் இருந்து அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரும் சுமார் ஆறு மாத காலம் வரை தொடர்ச்சியாக தங்கி இருந்து ஆராய்சிகளை மேற்கொள்கிறார்கள். பிற்காலத்தில் நிலவில், செவ்வாய் கிரகத்தில் தங்கி இருப்பதற்கு பயிற்சிக் களமாக இந்த விண்வெளி மையத்தை உருவாக்கி இருகின்றனர். விண்வெளியில் தொடர்ந்து தங்கி இருக்கும்போது தசைகள் இழப்பும் எலும்புகளின் நிறை குறைவும் வெகு விரைவில் ஈர்ப்பதும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்பதற்காக ஒவ்வொரு விண்வெளி வீரரும் ஒரு நாளில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்தாகவேண்டும். 

 

சினி பட்டறை:


மங்காத்தா பட வெற்றிக்கு பின் சத்தமில்லாமல் 'தல' அஜித் தன் அடுத்த படமான பில்லா 2 -வில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதில் அஜித் இருபது வயது இளைஞாக தோற்றமளிக்க வேண்டி இருப்பதால் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்கிறாராம். முதல் கட்ட படபிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படபிடிப்புக்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இதன் இயக்குனர் சக்ரி டோளிடி கூறி இருக்கிறார்.



சூர்யா, ஸ்ருதிஹாசன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் முதல் பதினைந்து நிமிடம் பிரமாண்டமாக இருக்கப் போகிறதாம். நிமிடத்திற்கு ஒரு கோடி என பதினைந்து நிமிட காட்சிக்கு பதினைந்து கோடி ருபாய் செலேவ செய்திருக்கிறார்களாம். இதில் சூர்யா மூன்று பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். ஏழாம் அறிவு வரும் அக்டோபர் 26 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

கருத்து கந்தசாமி:

ஒரு ஜென் துறவியும் அவர் சீடனும் ஒரு ஆற்றின் கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த ஆற்றில் உள்ள மீன்களைப் பார், எவ்வளவு சந்தோசமாக நீந்திக் கொண்டிருகின்றனர் என்று சீடனை பார்த்துக் கூறினார்.

அதற்கு சீடன், குருவே நீங்கள் அந்த மீன் இல்லையே, அவை உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் நீந்திக் கொண்டிருகின்றன என்று எப்படி உங்களுக்கு தெரியும் என்றான்.

அதற்கு அவர், நீ நான் இல்லையே,  அவை மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு தெரியாது என்பது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டார்.

ரசித்த வீடியோ:






5 comments:

மகேந்திரன் said...

கூட்டாஞ்சோற்றை ரசித்து புசித்தேன்....

Narayanan Narasingam said...

//@மகேந்திரன் said...கூட்டாஞ்சோற்றை ரசித்து புசித்தேன்....//

நன்றி மகேந்திரன்.

vijaya said...

கூட்டாஞ்சோறு மிக காரம் (நாட்டு நடப்பு)

vijaya said...

கூட்டாஞ்சோறு மிக காரம் (நாட்டு நடப்பு)ஏன் ஏழாம் அறிவு விமர்சனம் எதுவும் பண்ண வில்லை ரிலீஸ் ஆகி 2 மாதம் ஆகி விட்டது

Narayanan Narasingam said...

//@vijaya said...
கூட்டாஞ்சோறு மிக காரம் (நாட்டு நடப்பு)ஏன் ஏழாம் அறிவு விமர்சனம் எதுவும் பண்ண வில்லை ரிலீஸ் ஆகி 2 மாதம் ஆகி விட்டது//

ஆமாம், நாட்டு நடப்பை பார்த்து கொஞ்சம் பிரஷர் ஏறினால் பதிவுகளில் கொஞ்சம் காரம் கூடத்தான் செய்கிறது.

சினிமா விமர்சனங்கள் நான் அதிகமாக எழுதுவதில்லை. படத்தைப் பார்த்தவுடன் மனதைப் போட்டு பிசைந்தால் அந்தப் படத்தைப் பற்றி எழுதுவேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...