Friday, September 23, 2011

தீபாவளி - 55 வார்த்தை சிறுகதை


தீபாவளி. புதுச்சீலையில் மின்னிய அம்மாவை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன்.

அவள் முகத்தில் பெருமை, நான் வாங்கிக் கொடுத்ததாம். அருகில் அப்பா பளீர் வேட்டி சட்டையில். அவர்கள் பின்னால் அண்ணன், அண்ணி, அக்கா, மற்றும் குழந்தைகள் பட்டாளம். இடையிடையே வெடிச்சத்தம். 

அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எதேச்சையாக மணி பார்த்தேன், இரவு பதினொன்று. நேரமாச்சு, நான் காலைலே சீக்கிரம் எழுந்து, நியூயார்க் ஆபீசுக்கு போகணும். நான் நாளைக்கு பேசுறேன் என்று ஸ்கைப் திரையில் தெரிந்த முகங்களை மனமில்லாமல் மூடினேன்.


4 comments:

காந்தி பனங்கூர் said...

என்னங்க பண்ணுவது, நம்மைப்போன்று வெளி நாட்டில் வாழும் மக்களுக்கு இந்த அளவுதான் சந்தோசம் கிடைக்குது. இந்த தகல் தொழில் நுட்பம் இல்லையென்றால் இதுவும் நடக்காது. அருமையான பதிவு.

Narayanan Narasingam said...

//@காந்தி பனங்கூர் said...//

வாங்க சார். சரியா சொன்னீங்க. எதோ இந்த அளவுக்கு முடியுதேன்னு நினைச்சு நம்மை நாமே சமாதானப் படுதிக்கவேண்டியதுதான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

bandhu said...

55 வார்த்தைகளுக்குள் அடக்க வேண்டும் என்பதற்காக காம்ப்ரமைஸ் பண்ணாமல் எழுதியிருக்கிறீர்கள். நன்றாக உள்ளது!

Narayanan Narasingam said...

//@bandhu said...55 வார்த்தைகளுக்குள் அடக்க வேண்டும் என்பதற்காக காம்ப்ரமைஸ் பண்ணாமல் எழுதியிருக்கிறீர்கள். நன்றாக உள்ளது!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...