ஐம்பது இன்ச் டிவியில் ஆங்கிலப்படம்,
மாலை சிற்றுண்டி விழுங்கி
சூடான காபியை ரசித்து குடித்து,
காரில் ஏறி அமர்ந்து
ஏ.சி. போதாமல் சற்றே கூட்டி,
வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க
இசையின் ஒலியைச் சற்று அதிகப்படுத்தி,
மிதமான வேகத்தில் செல்லும்போது
கண்ணில் பட்டது அந்த காட்சி,
சாலையோரத்தில் தாயின் மடியில்
பசியால் கதறும் குழந்தைக்கு பின்னே,தலைவர் படத்தின் ரிலீஸ்-போஸ்டர்
மனதில் ஒரு உற்சாக சிலிர்ப்பு,
எவ்வளவு செலவானாலும் சரி
முதல் நாளே பார்த்துவிட வேண்டும்.
9 comments:
வாவ்...
நிஜ காட்சியை தாண்டி நிழல் காட்சிதான் நம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது...
ஃபாலோயர்ஸ் விட்கெட் சேர்த்திடுங்க நண்பரே!
//@ஷீ-நிசி said... //
வாங்க ஷீ-நிசி. சரியாய் பாயிண்டை பிடிச்சீங்க.
ஆம் பசி, வறுமை, அழுகை இதையெல்லாம் பார்த்து பார்த்து மனது மரத்துப் போய்விட்டதோ என்று சில நேரங்களில் தோன்றுகிறது. தான் எப்படி சந்தோசமாக இருப்பது என்பதில் தான் மனம் குறியாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் அதற்கும் மேலாக பின் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கும் மிகவும் நன்றி.
யதார்த்தமான
கவிதை.
தமிழ்மணம் ஒன்று.
//@மகேந்திரன் said... யதார்த்தமான கவிதை.//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.
அருமையான கற்பனை..
கவிதையும், சிந்தனையும் அருமை..
பாராட்டுகள்..
//@!* வேடந்தாங்கல் - கருன் *! said... அருமையான கற்பனை.. கவிதையும், சிந்தனையும் அருமை.. பாராட்டுகள்..//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வேடந்தாங்கல் - கருன்
மனதை உருக வச்சிட்டீங்க பாஸ்...கவிதை அருமை.
அறிவியல் பதிவு வரும்னு நினைச்சா கவிதை பதிவு போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்
//@காந்தி பனங்கூர் said...
மனதை உருக வச்சிட்டீங்க பாஸ்...கவிதை அருமை.
அறிவியல் பதிவு வரும்னு நினைச்சா கவிதை பதிவு போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்//
வாங்க காந்தி, அறிவியல் பதிவு நிறைய வரும், நடுவுல இந்த மாதிரி சில பதிவுகள் எடுத்து விடறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Post a Comment