கல்யாணமே பண்ணிக்காம ரேகா கூட சந்தோசமா தானேம்மா இருக்கேன்.
இதெல்லாம் ஒரு வாழக்கையாடா. எனக்கும் பேரன் பேத்தி வேணும்னு ஆசை இருக்காதா.
குழந்தை பெத்துக்க மட்டும் தான் முடியாது. பார்க்க அழகா இருக்கா, சொல்றதை கேக்குறா. அது போதும்.
இதெல்லாம் சரியில்லை. மொதல்ல இதை எங்கயாவது தொலைச்சிட்டு ஒரு நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு வா.
இதைக் கேட்டு அப்படியே சரிந்த ரேகாவை பிடித்து அவள் இடுப்பின் பின்புறம் இணைந்திருந்த ஒயரை இழுத்து எலெக்ட்ரிக் பாயிண்டில் சொருகினான்.
பின் குறிப்பு: கதையை முட்டி மோதி ஐம்பைதைந்து வார்த்தைகளில் முடித்து விட்டேன். சில நேரங்களில் வார்த்தைகளைச் சுருக்கி விஷயத்தை சொல்வதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது. சுஜாதா அவர்கள் எல்லாவற்றையும் வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கூறுவார். அது போல அங்கங்கே ஹிண்ட்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
2 comments:
அருமை! இனிய பாராட்டுகள்!
//துளசி கோபால் said...அருமை! இனிய பாராட்டுகள்!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி மேடம்.
Post a Comment