NRI மாப்பிள்ளை - 55 வார்த்தை சிறுகதை
ராஜம், அடுத்த வாரம் பட்டிமன்றத்திலே, இந்தியாவை சப்போர்ட் பண்ணி பேசப்போறேன் என்றார் சண்முகம்.
ராஜம், அடுத்த வாரம் பட்டிமன்றத்திலே, இந்தியாவை சப்போர்ட் பண்ணி பேசப்போறேன் என்றார் சண்முகம்.
நோ, நோ, நீங்க வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும். நாம ரெண்டு தலைமுறையா இங்கே இருக்கோம். நம்ம குழந்தைங்களும் இங்கேதான் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டு இருக்காங்க.
நீ சொல்றா மாதிரினா...
ஒரு நிமிஷம், இந்தியா கால் அண்ணாகிட்டேயிருந்து...
ஆமாண்ணா, ரிஷி கல்யாண விஷயம் பேசத்தான் காலைலே கூப்பிட்டிருந்தேன். நம்ம ஊருலேயே, நல்ல பொண்ணா பாருண்ணா. பாக்கறதுக்கு லட்சணமா, படிச்சு இருந்தாப் போதும்...
2 comments:
வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும்கல்யாணத்திற்குமட்டும் நம்ம பொண்ணு..!
//இராஜராஜேஸ்வரி said...
வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும்கல்யாணத்திற்குமட்டும் நம்ம பொண்ணு..!//
ஆமாம், வீட்டுலே இந்திய சாப்பாடு, தமிழ் டிவி சானல் எல்லாம் கேப்பாங்க. ஆனா பொண்ணு மட்டும் இந்தியாவில் இருந்து எடுப்பாங்க.
பை தி பை, இது ஒரு உண்மைச் சம்பவம். (அய்யயோ சொல்லிட்டேனா!)
Post a Comment