Thursday, August 4, 2011

இந்திய பயணம், உதவும் கரங்கள் மற்றும் பாரிஸ் வாழ் மக்களுக்கு ஒரு கேள்வி



இந்திய பயணம்:

இப்போது தான் இந்திய பயணம் என்று பதிவு எழுதியது போல இருக்கிறது, அதற்குள் திரும்பி இரை தேடும் வாழ்க்கைக்கு கிளம்பும் நாள் நெருங்கிவிட்டது. ஷாப்பிங், உணவகங்கள்,  உறவினர்களை சந்திப்பது, கோவில் குளம் சென்று வருவது என்று நன்றாக கழிந்தது. இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், எங்கள் மகள் பிறந்தநாளை மருதமலை கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, அங்கு அருகில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக (ஆதரவற்ற ? - இப்படி கூறலாமா என்று தெரியவில்லை, வேறு எதாவது வார்த்தை உள்ளதா ?) 'உதவும் கரங்கள்' நடத்தும் சொந்தம் என்கிற இடத்தில் கொண்டாடினோம். சுமார் எழுபது குழந்தைகள் உணவு மற்றும் இனிப்பு வகைகள் வழங்கிவிட்டு அவர்கள் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடுவதை கேட்டு எனக்கு லேசாக கண்ணீரே வந்துவிட்டது. வேறு இடத்தில் எத்தனை ஆயிரம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாடினாலும் இந்த நெகிழ்ச்சி கிடைப்பதில்லை. இந்த எழுபது குழந்தைகளை பார்த்துகொள்வதுடன் அவர்களே அருகில் இந்த குழந்தைகளுக்கென ஒரு பள்ளியும் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியில் வெளியில் இருந்து குழந்தைகள் வந்து பயில்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்தபோது, இதே இடத்தில் எங்கள் மகள் பிறந்தநாளை கொண்டாடினோம். அப்போது அங்கு 'சிம்ரன்' என்று பெயரிடப்பட்ட சிறு குழந்தையை எங்களுக்கு ஏனோ மிகவும் பிடித்திருந்தது. அப்போது சிறு குழந்தையாக பார்த்த சிம்ரன் நன்றாக வளர்ந்திருந்தாள். அந்த குழந்தைக்கென்று தனியாக எதாவது செய்யவேண்டும் என்று எங்கள் மகள் விரும்பியதால், சிம்ரனின் வருடாந்திர கல்வி செலவை நாங்கள் ஏற்றுகொள்வதாக கூறி, இந்த வருடத்திற்கான தொகையை கட்டிவிட்டு வந்தோம். அந்த குழந்தையின் முகத்தில் அப்படியொரு வெட்கம் கலந்த சந்தோசம். உதவும் கரங்கள் அமைப்பு தங்களுக்கு வரும் நன்கொடையை மற்ற பிரபலமாகாத சிறிய அமைப்புகளுக்கும் கொடுத்து உதவுதாக கேள்விப்பட்டேன். நீங்கள் கோவைக்கு சென்றால், இங்கு சென்று முடிந்த உதவி செய்ய கேட்டுக்கொள்ளவே இந்த விஷயத்தை கூறுகிறேன். இன்னொரு தகவல் - இங்கு வளரும் எல்லா குழந்தைகளுக்கும் அவர்களின் பெயரின் பின்னே வித்யாசாகர் என்று இந்த அமைப்பை உருவாக்கியவரின் பெயரை Lastname -ஆக போடுகிறார்கள்.

பாரிஸ் வாழ் மக்களுக்கு ஒரு கேள்வி:

இந்த வாரம் பாரிஸ் (Paris, Charles de Gaulle -CDG) வழியாக பாஸ்டன் செல்கிறேன். பாரிசில் சுமார் பதினோரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்திற்குள் ஏர்போர்ட் விட்டு வெளியே சென்று அருகில் எதாவது பார்த்துவிட்டு திரும்ப முடியுமா அல்லது ஏர்போர்ட்டிலேயே காத்திருப்பது உத்தமமா ? பாரிஸ் வாழ் மக்கள் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள், எதாவது ஐடியா கொடுத்தால் நன்றாக இருக்கும். 

4 comments:

Anonymous said...

Enna boss athukulla trip mudinchiducha?!?!?! Naanga innum trip start pannave ellai....

Narayanan Narasingam said...

//Enna boss athukulla trip mudinchiducha?!?!?! Naanga innum trip start pannave ellai...//

அமாம் பாஸ், நாலு வாரம் எப்படி ஓடுச்சுனே தெரியலே. உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

//இந்த வாரம் பாரிஸ் (Paris, Charles de Gaulle -CDG) வழியாக பாஸ்டன் செல்கிறேன். பாரிசில் சுமார் பதினோரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்திற்குள் ஏர்போர்ட் விட்டு வெளியே சென்று அருகில் எதாவது பார்த்துவிட்டு திரும்ப முடியுமா அல்லது ஏர்போர்ட்டிலேயே காத்திருப்பது உத்தமமா ? பாரிஸ் வாழ் மக்கள் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள், எதாவது ஐடியா கொடுத்தால் நன்றாக இருக்கும். //

CDG ஊருக்கு வெளியிலன்னா இருக்கு. டாக்சி/மெட்ரோ புடிச்சு வந்து போகவே ரெண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகலாம். பகல் நேரம்னா நேரா ஐபில் டவர் போய் பாத்திட்டு அப்படியே ஷாம்ப்ஸ் எலிசி தெருவுல, நடந்து, பாத்து, ஷாப்பிங் பண்ணிட்டு, சாப்டுட்டு , ஆர்க் டி ட்ரயம்ப் பாத்துட்டு நேரா பொட்டிய கட்டவேண்டியதுதான். முடிஞ்சா CDGலயே க்ளோக் ரூமுல லக்கேஜ விட்டுட்டுப் போங்க.

இதுவே இரவுன்னா pigalle மாத்திரம் போயிட்டு அப்பீட் ஆயிருங்க ;)

Narayanan Narasingam said...

//CDG ஊருக்கு வெளியிலன்னா இருக்கு. டாக்சி/மெட்ரோ புடிச்சு வந்து போகவே ரெண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகலாம். பகல் நேரம்னா நேரா ஐபில் டவர் போய் பாத்திட்டு அப்படியே ஷாம்ப்ஸ் எலிசி தெருவுல, நடந்து, பாத்து, ஷாப்பிங் பண்ணிட்டு, சாப்டுட்டு , ஆர்க் டி ட்ரயம்ப் பாத்துட்டு நேரா பொட்டிய கட்டவேண்டியதுதான். முடிஞ்சா CDGலயே க்ளோக் ரூமுல லக்கேஜ விட்டுட்டுப் போங்க.

இதுவே இரவுன்னா pigalle மாத்திரம் போயிட்டு அப்பீட் ஆயிருங்க ;) //

விவரத்திற்கு ரொம்ப நன்றி. காலை எட்டு மணி அளவில் பாரிஸ் ரீச் ஆகிறோம். திரும்பவும் மாலை ஏழு மணிக்கு பிளைட். ஒரு மூணு மணி நேரம் முன்னாடி வந்தா சரியாய் இருக்கும்னு நினைக்கிறன். ஐபில் டவர் பார்க்க மெட்ரோவிலே போயிட்டு வர முடியுமா. டாக்சிலே போயிட்டு ஏதும் ட்ராபிக்லே மாட்டிக்க கூடாதேன்னு பாக்குறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...